இலங்கை கடற்பரப்பில் புதைந்துள்ள பொக்கிஷம்! போட்டிப்போடும் சர்வதேச நாடுகள்

Report Print Murali Murali in அபிவிருத்தி

உலக நாடுகள் அனைத்தும் சமகாலத்தில் பொக்கிஷமாக பர்க்கப்படும் "கச்சா எண்ணெய்" இலங்கையின் மன்னார் கடல்படுக்கையில் காணப்படுகின்றது.

இந்நிலையில், இலங்கையின் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வில் ஈடுபடுவதற்கு சர்வதேச நாடுகள் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டி வருவதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம், சாலிய விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், "மன்னார் கடல் படுக்கையில் உள்ள 13 துண்டங்களில், 8 துண்டங்களில் அகழ்வை மேற்கொள்வதற்கு, 8 வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளன.

இந்த விடயம வெற்றியளித்தால் இலங்கைக்கு நன்மையாக அமையும்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, கெய்ன் இந்தியா நிறுவனம் மன்னார் கடல் படுக்கையில், 2ஆவது துண்டத்தில் எண்ணெய் அகழ்வு முயற்சிகளில் ஈடுபட்டிருந்தது.

எனினும், உலகளாவிய எரிபொருள் விலைச் சரிவை அடுத்து, இந்த துண்டத்தில் எரிவாயு அகழ்வு முயற்சியில் இருந்து விலகுவதாக, கெய்ன் இந்தியா நிறுவனம் 2015ஆம் ஆண்டு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.