காத்தான்குடியில் 100 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி திட்டங்கள்

Report Print Kumar in அபிவிருத்தி

மட்டக்களப்பு - காத்தான்குடியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாரூக் தெரிவித்துள்ளார்.

காத்தான்குடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

100 மில்லியன் ரூபா செலவில் இந்த அபிவிருத்தி திட்டங்கள் காத்தான்குடியில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. இதில் கிழக்கு மாகாண முதலமைச்சர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் உட்பட பலர் பங்குபற்றவுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பல்வேறு வீதிகள் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதுடன், பாடசாலை கட்டடங்கள் உட்பட பல்வேறு கட்டட பணிகளும் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.