தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு

Report Print Suman Suman in அபிவிருத்தி

தெரிவு செய்யப்பட்ட 26 பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முல்லைத்தீவில் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு முல்லைத்தீவு பிரதி விவசாயப் பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன் தலைமையில், அவரது பணிமனையில் இடம்பெற்றுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

வட மாகாணசபை உறுப்பினர் ரவிகரனால் ஒதுக்கப்பட்ட நிதியினூடாகவே இந்த உபகரணங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில்,

எமது மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மிகவும் அதிகம். அவர்களுக்கான தேவைகளும் மிக அதிகமாக உள்ளன. இந்த நிலையில் நான் முடிந்தளவு உதவிகளை செய்து வருகின்றேன்.

தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளாகவுள்ள நீங்கள் இதன்மூலம் பயனடைய வேண்டும். உங்களுடைய வளர்ச்சியின் மூலம் தான் இவ்வாறான திட்டங்களை நாம் தொடர்ந்து முன்னெடுக்க முடியும் என கூறியுள்ளார்.

advertisement