ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலயத்தின் புதிய கட்டடம் திறந்து வைப்பு

Report Print Rusath in அபிவிருத்தி

மட்டக்களப்பு - ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலயத்தின் மூன்று மாடிகளைக் கொண்ட வகுப்பறை மற்றும் நிர்வாகக் கட்டடம் என்பன திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்று பாடசாலை அதிபர் எம்.எல்.எம். பைஷல் தலைமையில் நடைபெற்றுள்ளதுடன், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டினால் திறந்து வைக்கப்பட்டு பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

தகரக் கொட்டிலில் இயங்கிவந்த பாடசாலையின் அவலத்தை அறிந்து கொண்ட பின்னர் கட்டட நிர்மாணத்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியிருந்தார்.

அத்துடன், இந்த பாடசாலையில் 250 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர் என தெரியவந்துள்ளது.

மேலும், நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கேபி.எஸ். ஹமீட், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம். இஸ்மாயில், அதிகாரிகள், அபிவிருத்தி குழுவினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

advertisement