ஆல்டி கீழ்ப்பிரிவு தோட்ட புதிய கரப்பந்தாட்ட மைதானத்திற்காக பணிகள் ஆரம்பம்

Report Print Gokulan Gokulan in அபிவிருத்தி

பொகவந்தலாவை ஆல்டி கீழ்ப்பிரிவு தோட்டத்தில் கரப்பந்தாட்ட மைதானமொன்றை நிர்மாணிப்பதற்காக குறித்த இடத்தை பெக்கோ இயந்திரம் கொண்டு வெட்டும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கரப்பந்தாட்ட மைதான வசதியில்லாத காரணத்தினால் தமது விளையாட்டு திறமைகளை வளர்த்து கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஆல்டி தோட்ட இளைஞர்கள் மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரனின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் மூலம் பொகவந்தலாவை ஆல்டி கீழ்ப்பிரிவு தோட்டத்தில் கரப்பந்தாட்ட மைதானமொன்றை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

அந்த வகையில் 50 ஆயிரம் ரூபா நிதி அம்பகமுவ பிரதேச சபையின் ஊடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் ஆல்டி தோட்ட முகாமையாளர் சிசிரவிஜயவர்த்தன, உதவி முகாமையாளர் சந்தீப், தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆல்டி கீழ்ப்பிரிவு தலைவர் ஜி.ராஜதுரை, உபதலைவர் டி.பத்மநாதன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.