தோட்ட மக்களுக்கான 30 தனிவீடுகள் கையளிப்பு

Report Print Gokulan Gokulan in அபிவிருத்தி

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் நுவரெலியா மாவட்ட வலப்பனை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ராகல தோட்ட மக்களுக்கான 30 தனிவீடுகள் நேற்று கையளிக்கப்பட்டன.

கடந்த 5 வருடங்களுக்கும் முற்பட்ட காலத்தில் கைவிடப்பட்ட இந்த திட்டத்தை அமைச்சர் பழனி திகாம்பரம் தனது நிதியொதுக்கீட்டில் தனிவீடுகளாக மாற்றியமைத்துள்ளதுடன், மேலும் காணி உரித்துக்களை வரும் 29ஆம் திகதி கையளிக்கவுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேசிய உணவு உற்பத்தி திட்டத்திற்கு அமைவாக சிறுவர்களுக்கான போஷாக்கு உணவும், வீட்டுத் தோட்டத்திற்கான மரக்கன்று நாட்டலும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், அமைச்சர் பழனி திகாம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், அமைச்சின் செயலாளர் ரஞ்சனி நடராஜபிள்ளை, மாகாணசபை உறுப்பினர் சரஸ்வதி சிவகுரு, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் புத்திர சிகாமணி உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.