கிளிநொச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

Report Print Suman Suman in அபிவிருத்தி

கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் புதிய கட்டடம் இன்று வடக்கு மாகாண முதலமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகில் அமைக்கப்பட்ட புதிய கட்டடமே இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மாகாண சபை உறுப்பினர்களின் கோரிக்கையினை ஏற்று வடக்கு முதலமைச்சரினால் ஒதுக்கப்பட்ட விசேட நிதியின் கீழ் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான வை. தவநாதன், அ.பசுபதிபிள்ளை ஆகியோர் தலா 20 இலட்சம் ரூபாவும், ப. அரியரத்தினம் இரண்டு இலட்சம் ரூபாவுமாக 42 இலட்சம் ரூபாவுக்கு குறித்த கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சமூக சேவைகள் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், மாகாண சபை உறுப்பினர்களான தவநாதன், பசுபதிபிள்ளை, பிரதேசசபை உறுப்பினர்களான ரஜனிகாந், சிவநேசன், சறோஜாதேவி, மற்றும் மாகாண, மாவட்ட, பிரதேச சமூக சேவைகள் பணிப்பாளர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலர் கலந்துகொண்டனர்.

மேலதிக செய்திகள் - யது