உலக சந்தையில் தங்கத்திற்கு ஏற்பட்ட நிலை

Report Print Shalini in பொருளாதாரம்

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

இதன்படி கடந்த 3 வாரங்களாக எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் 1,218 அமெரிக்க டொலராக பதிவாகி உள்ளது.

கடந்த 3 வாரங்களாக ஒரு அவுன்ஸ் தங்கம் 1,218 அமெரிக்க டொலராகவே உள்ளது. கூடவும் இல்லை, குறையவும் இல்லை.

இதற்கு காரணம் அமெரிக்காவின் நிதி கொள்கையே என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தை அவுன்ஸ் கணக்கில் விலை சொல்வார்கள். ஒரு அவுன்ஸ் என்பது 32 கிராம், அதாவது நான்கு சவரன். இது சொக்கத் தங்கம், 24 கரட் தங்கம் ஆகும்.