தாய்லாந்திலிருந்து அரிசி இறக்குமதி செய்ய இலங்கை பேச்சு

Report Print Ajith Ajith in பொருளாதாரம்
advertisement

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண தாய்லாந்திடமிருந்து 200, 000 தொன் அரிசியை அரசாங்கம் கொள்வனவு செய்யவுள்ளது.

இதேவேளை, பங்களாதேஷ் தாய்லாந்திடமிருந்து 200, 000 தொன் அரிசியை கொள்வனவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தாய்லாந்து வர்த்தக அமைச்சின் வெளிநாட்டு வர்த்தக திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் கீரடி ருச்சானோ (keerati rushchano) தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இரு நாடுகளும் வறட்சி மற்றும் வெள்ளம் முதலான இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதால் தாய்லாந்திடம் அரியை கொள்வனவு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டில் தாய்லாந்திடமிருந்து 280 தொன் அரிசியை இலங்கை இறக்குமதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

advertisement