கப்பித்தாவத்தை தமிழ் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி

Report Print Akkash in கல்வி

கொழும்பு 09, கப்பித்தாவத்தையில் அமைந்துள்ள தொண்டர் தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இடம்பெற்றுள்ளது.

குறித்த இல்ல விளையாட்டுப் போட்டியானது பாடசாலை மைதானத்தில் இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் மேல் மாகாண சபை உறுப்பினர் சன் குகவரதன், கொழும்பு வலயக் கல்விப் பணிப்பாளர் ஜயந்த விக்ரமநாயக்க மற்றும் மத்திய கொழும்பின் கல்விப் பிரிவு இயக்குனர் எஸ்.பிரபா ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மேலும், இதில் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments