மட்டக்களப்பில் 27வது நாள்...! தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்

Report Print Kumar in கல்வி

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்ச்சியாக 27வது நாளாகவும் நடைபெற்றுவருகின்றது.

தமது நியாயமான கோரிக்கையினை வலியுறுத்தி மேற்கொண்டுவரும் இந்த போராட்டத்திற்கு உரிய தரப்பினர் இன்னும் நடவடிக்கையெடுக்காமை குறித்து இங்கு பட்டதாரிகள் கவலை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

தமது கோரிக்கைக்கு நியாயமான தீர்வு எழுத்து மூலம் வழங்கும் வரையில் தமது போராட்டம் தொடரும் என இங்கு பட்டதாரிகள் தெரிவித்தனர்.

படித்த சமூகத்தினை இந்த அரசாங்கம் நடுவீதிக்கு கொண்டுவந்துள்ளதாகவும் இங்கு பட்டதாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

advertisement

Comments