சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு போட்டிகள்

Report Print Navoj in கல்வி

மட்டக்களப்பு மாவட்டத்தில் 95ஆவது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இம்மாதம் கட்டுரை, பேச்சு மற்றும் சித்திரப்போட்டிகள் நடத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு சபையின் தலைவர் ஆர்.இராயப்பு தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் இதில் பங்குபற்ற முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டுறவு சமுகத்தின் வாழ்க்கை வழிகாட்டி கூட்டுறவாகும் என்ற தலைப்பில் கனிஸ்ட, சிரேஸ்ட பிரிவுகளாக இப்போட்டிகள் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடத்தப்படவுள்ளது.

இந்த போட்டிகளில் மாவட்ட ரீதியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறும் மாணவர்கள் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்படுவதுடன், தேசிய மட்டப்போட்டிகளுக்கு அழைத்து செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருடாந்தம் நடைபெறும் கூட்டுறவு விழாவில் மாணவர்களைப் பங்கு பெறச்செய்வதுடன் மாணவர்கள் மத்தியில் கூட்டுறவு பற்றிய அறிவினை மேம்படுத்துவதும் இப்போட்டிகளின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலயக்கல்விப் பணிப்பாளர்களின் அனுமதி பெற்று பாடசாலைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் விண்ணப்பங்கள் வந்த வண்ணமுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஜுலை மாதத்தின் முதலாவது சனிக்கிழமை சர்வதேச கூட்டுறவு தினம் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.