ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சிங்கள மொழிப் பிரிவு

Report Print Steephen Steephen in கல்வி

இந்தியாவின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மொழி, இலக்கிய மற்றும் கலாசார பீடத்தில் சிங்கள மொழியை கற்பிக்கும் பிரிவு ஒன்றை ஸ்தாபிப்பது குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதன் ஊடக சிங்கள மொழி, இலக்கியம் மற்றும் இலங்கையின் கலாசாரம் குறித்து கற்க விரும்பும் இந்தியா உட்பட சார்க் நாடுகள் மற்றும் ஏனைய வெளிநாடுகளின் மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தாக்கல் செய்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.