வாகரை மாணவி கவிதை போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு

Report Print Reeron Reeron in கல்வி

மட்டக்களப்பு - கல்குடா வாகரை மகாவித்தியாலய மாணவி பரமலிங்கம் மீனூஜா மாகாண மட்டத்தில் நடைபெற்ற தமிழ் தின கவிதைப் போட்டியில் முதலிடம் பிடித்து தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார்.

அண்மையில் மாகாண மட்டத்தில் நடைபெற்ற தமிழ் தின போட்டி 2017 கவிதையாக்கம் பிரிவு 4இல் கலந்து கொண்ட மட்டக்களப்பு - கல்குடா வாகரை மகா வித்தியாலய மாணவிபரமலிங்கம் மீனூஜா என்ற மாணவி வாகரையில் முதல் முறையாக முதலிடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, தன்னை வழிப்படுத்தி தேசிய மட்டத்திற்கு தெரிவாகுவதற்கு பயிற்றுவித்த ஜெயகுமணன், து.தசாகரன். அதிபர் சு. அரசரெட்னம் மற்றும் ஏனைய ஆசிரியர்களுக்கும் தனது நன்றிகளை மாணவி கூறியுள்ளார்.