பொலன்னறுவை மாவட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Report Print Navoj in கல்வி

சிங்கப்பூர் நாட்டின் மஹா பௌத்த அமைப்பின் மூலம் இலங்கையில் பின்தங்கிய பகுதிகளில் உள்ள வரிய மாணவர்களின் கல்வி அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு உதவித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று(09) பாசிக்குடா லாயா லாவேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.

மஹா கருணா பௌத்த அமைப்பின் ஆலோசகர் கே.குணரத்ன தேரோ தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பொலன்னறுவை வெலிகந்த பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாணவர்களுக்கும், கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலும் கல்குடா கிராம சேவகர் பிரிவிலும் தெரிவு செய்யப்பட்ட 300 மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் பாடசாலை மாணவர்களுக்காக பொதிசெய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் பாடசாலை சீருடைக்கான துணிகள் என்பனவும், தாய்மார்களுக்கான வீட்டுப் பாவனைப் பொருட்களும் கையளிக்கப்பட்டன.

இதேவேளை குறித்த நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் 23ஆம் படைப்பிரிவின் பிரதான கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மற்றும் சிங்கப்பூர் நாட்டில் இருந்து வருகை தந்த மஹா கருணா பௌத்த அமைப்பின் பிரதிநிதிகள் 79 பேரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.