தேசிய மட்டத்திலான மாபெரும் ''இயற்சமர்'' விவாதப்போட்டி

Report Print Thileepan Thileepan in கல்வி

இலங்கையில் சைவத்தையும், தமிழையும் வளர்த்த பெரியார்களில் ஒருவராகிய முத்தமிழ் வித்தகர் என்று போற்றப்படுகின்ற சுவாமி விபுலாநந்தரின் எழுபதாவது நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியா விபுலாநந்த கல்லூரியின் பழையமாணவர் சங்கம் இயற்சமர் என்னும் விவாத போட்டியினை நடத்தவுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த போட்டி ஆரம்பமாக உள்ளதாக விழா ஏற்பாட்டுக்குழு தலைவர் ஈ.ஜரேஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,

விபுலாநந்தரின் நினைவுதினத்தை முன்னிட்டு தேசிய மட்டத்தில் தமிழ்மொழி மூல பாடசாலைகளுக்கிடையே மாபெரும் விவாதச் சுற்று போட்டி நடைபெற உள்ளது.

இதற்கான விணண்ணப்ப படிவங்கள் சகல பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் பங்கு பெற விரும்பும் பாடசாலைகள் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து,

இயற்சமர்-2017,
தலைவர்,
பழைய மாணவர் சங்கம்,
வ.விபுலாநந்தாகல்லூரி,
பண்டாரிகுளம்,
வவுனியா.

என்னும் முகவரிக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்பதாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

விண்ணப்ப படிவங்கள் கிடைக்காத பாடசாலைகள் 077 7747297 என்னும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டி நிற்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.