அகில இலங்கை சமூக விஞ்ஞான போட்டியில் மன்னார் நானாட்டான் வித்தியாலய மாணவி சாதனை

Report Print Ashik in கல்வி

அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற சமூக விஞ்ஞான போட்டிகளில் மன்னார் நானாட்டான் தமிழ் மகா வித்தியாலத்தில் தரம் 9இல் கல்வி கற்கும் மாணவி செலஸ்டின் அஜென்டினா இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

குறித்த மாணவி அகில இலங்கை ரீதியில் இடம் பெற்ற பெற்ற 501 தொடக்கம் 1000 வரையிலான மாணவர் தொகையை கொண்ட தமிழ் பிரிவு பாடசாலைகளுக்கு இடையே இடம் பெற்ற சமூக, விஞ்ஞான போட்டியில் 2ஆம் இடத்தை பெற்றுள்ளார்.

அத்துடன் அகில இலங்கை ரீதியில் 3 மொழிக்குமான சகல பாடசாலைகளுக்குமான சமூக விஞ்ஞான போட்டியில் 3ஆம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த மாணவி தனது படசாலைக்கும், நானாட்டான் கோட்டத்திற்கும், மன்னார் வலயத்திற்கும், வட மாகாணத்திற்கும் பெருமை தேடிக்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.