பல்கலைக்கழகங்களின் விஞ்ஞான பீடங்களில் நிலவும் மாணவர் வெற்றிடங்கள் நிரப்பப்படுவதில்லை

Report Print Kamel Kamel in கல்வி
advertisement

பல்கலைக்கழகங்களின் விஞ்ஞான பீடங்களில் நிலவும் மாணவர் வெற்றிடங்கள் நிரப்பப்படுவதில்லை என பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் அருண குமார தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக் கழகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் பல்கலைக்கழகங்களின் விஞ்ஞான பீடங்களில் சுமார் 5000 மாணவர் வெற்றிடங்கள் காணப்பட்டது.

இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு காத்திரமான திட்டமொன்றை இதுவரையில் உருவாக்கவில்லை.

தனியார் பல்கலைக்கழகங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் இந்த அரசாங்கம் அரச பல்கலைக்கழகங்களை சீர்குலைக்கும் வகையில் செயற்படுகின்றது.

இந்த கலப்பு அரசாங்கத்திற்கு கல்வி தொடர்பான நோக்கமொன்று கிடையாது.

அவ்வாறு இருந்திருந்தால் பெருந்தெருக்கள் அமைச்சுடன் உயர்கல்வி அமைச்சை அரசாங்கம் இணைத்திருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகமொன்றுக்கு தெரிவாகும் மாணவ மாணவியர் அந்த பாடநெறியை கற்காவிட்டால் அதற்கு இசட்புள்ளி அடிப்படையில் அடுத்த நிலையில் உள்ள மாணவ மாணவியருக்கு அந்த இடத்தை வழங்காமையினால் இவ்வாறு ஆண்டுதோறும் வெற்றிடங்கள் உருவாகின்றன என தெரிவிக்கப்படுகிறது.

advertisement