வந்தாறுமூலை விஸ்ணு மகா வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்றத்தின் வாக்களிப்பு

Report Print Reeron Reeron in கல்வி

மட்டக்களப்பு - வந்தாறுமூலை விஸ்ணு மகா வித்தியாலயத்தில் வரலாற்றில் முதல் தடவையாக இடம்பெற்ற மாணவர் பாராளுமன்றத்தின் வாக்களிப்பு இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.

வந்தாறுமூலை விஸ்ணு மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இரண்டு தொகுதிகள் பிரிக்கப்பட்டு வாக்களிப்பு நடைபெற்று வருகிறது.

வாக்களிப்பு நிறைவு பெற்றதும் இன்றைய தினம் வாக்குப் பெட்டிகள் வாக்குச்சாவடியில் இருந்து வாக்குகள் கணக்கெடுக்கும் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வாக்குகள் கணக்கெடுக்கும் நடவடிக்கை ஆரம்பித்து இன்றைய தினமே வாக்குகள் கணக்கெடுக்கும் நடவடிக்கை முடிவடைந்ததும் பிரிதொரு பாடசாலை தினத்தில் இடம்பெற்ற தேர்தலில் வாக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்வுள்ளன.

இது தொடர்பில் குறித்த பாடசாலையின் அதிபர் எஸ்.மோகன் கருத்து தெரிவிக்கையில்,

பாடசாலை மட்டங்களில் இருந்து பாடசாலை மாணவர்களுக்கு நாட்டின் தேர்தல் முறைமை மற்றும் பாராளுமன்ற நடவடிக்கை, பாராளுமன்றத்துக்கு தெரிவாகிய பிரதிநிதிகளின் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடு, பாராளுமன்ற சபா நாயகர் மற்றும் எதிர் கட்சித் தலைவரின் செயற்பாடு இவ்வாறு பல்வேறுபட்ட முறைமைகளை மாணவர்களுக்கு செயற்பாடு ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் ஒரு தெளிவான விளக்கத்தைப் பெற்று அதன்மூலமாக இலங்கையின் தேர்தல் முறைமைகளை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் செயற்பாடாக இவ்வாறான மாணவர் பாராளுமன்றம் இடம்பெறுவதாக கூறினார்.