பாடசாலை மூடப்பட்டதால் கல்வியை கைவிடும் நிலையில் மாணவர்கள்

Report Print Yathu in கல்வி

வவுனியா வடக்கு வாருடையார், இலுப்பைக்குளம் வித்தியாலயம் மூடப்பட்டுள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்த கூடுதலான மாணவர்கள் கல்வியை தொடர முடியாத நிலையை எதிர்நோக்கியுள்ளதாக இப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இலுப்பைக்குளம் கிராமத்தில் உள்ள மேற்படி பாடசாலையில் தரம் 1 - 5 வரையான வகுப்புக்களை கொண்டு இயங்கி வந்தது.

குறித்த பாடசாலை கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையும் 50 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வந்த நிலையில் குறித்த பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்பட்டது.

தொடர்ந்து ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படாமல் பாடசாலை மூடப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து வசதிகள் இன்மையால் கடந்த வருடங்களில் கூடுதலான மாணவர்கள் பாடசாலையை விட்டு இடை விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கிராமத்தில் பாடசாலையை மூடியதால் மாணவர்கள் கல்வியை தொடர முடியாத நிலை காணப்படுகின்றது என்றும், அந்த பாடசாலையை இயங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.