க.பொ.த உயர்தரத்திற்கான உதவிக்கருத்தரங்கு நடத்தப்படவில்லை: கல்விச் சமூகம் விசனம்

Report Print V.T.Sahadevarajah in கல்வி

க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான உதவிக் கருத்தரங்கு வருடாவருடம் கல்வி அமைச்சினால் நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் இவ்வருடம் குறித்த கருத்தரங்கு நடத்தப்படாமையினால் இது குறித்து கல்விச் சமூகம் விசனம் வெளியிட்டுள்ளது.

குறித்த கருத்தரங்கிற்குத் தேவையான வினாத்தாள்கள் வருடாந்தம் பரீட்சைத் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் தயாரிக்கப்பட்டு வந்தன.

அத்தோடு இந்த உதவிக் கருத்தரங்குகள் 10 பாடங்களை முதன்மைப்படுத்தி நடத்தப்பட்டு வந்தன. பொருளியல் இணைந்த கணிதம், உயிரியல், சிங்களம், கணக்கியல், இரசாயனம், தமிழ், பௌதீகம். விவசாயம் மற்றும் வியாபாரக்கல்வி ஆகிய பாடங்களுக்கான கருத்தரங்குகள் நாடாளாவிய ரீதியில் இதுவரை காலமும் நடத்தப்பட்டு வந்தன.

மேலும் குறித்த கருத்தரங்குகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு நாடாளாவிய ரீதியில் உள்ள கல்விப் பணிப்பாளர்கள் ஒவ்வொருவரும் ஒத்துழைத்து வந்துள்ளனர்.

இதேவேளை, இதனை மேற்பார்வை செய்வதற்கு இணைப்பாளர் ஒருவரை நியமிக்குமாறும், அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ளச் செய்யுமாறும் அறிவித்தலும் விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த கருத்தரங்கு இந்த வருடம் நடத்தப்படாமையினால் கல்வித்துறையைச் சார்ந்த அனைத்துத் தரப்பினரிடையேயும் இது விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.