உயர்தரப் பரீட்சை இன்றைய தினம் ஆரம்பம்

Report Print Kamel Kamel in கல்வி

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது.

நாட்டின் 2230 பரீட்சை மத்திய நிலையங்களில் இன்று காலை 8.30 மணிக்கு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ளது.

இம்முறை உயர்தரப் பரீட்சைக்காக பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் 315227 பேர் தோற்றவுள்ளனர்.

பரீட்சை மத்திய நிலையங்களில் ஏனைய எந்தவொரு செயற்பாடுகளையும் நடத்த அனுமதியில்லை எனவும், அனுமதி வழங்கப்படாத எவரும் பரீட்சை மத்திய நிலையத்திற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக படசாலைகளின் ஆசிரியர்கள் பரீட்சை நிலையங்களுக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படாது.

நுழைவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை அல்லது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணம் ஒன்றை எடுத்துக் கொண்டு காலை 8.00 மணியளவில் பரீட்சை நிலையத்திற்கு சமூகமளிக்குமாறு பரீட்சார்த்திகளிடம் கோரப்பட்டுள்ளது.

ப்ளுடூத், ஸ்மார்ட் வொட்ச், ஸ்மார்ட் போன் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை பரீட்சை நிலையத்திற்குள் எடுத்துச் செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான கருவிகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு பரீட்சைக்குத் தோற்றினால் ஐந்து ஆண்டு கால தடை விதிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யு.எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

பரீட்சை மோசடிகளை தடுக்க விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

24 மணித்தியாலமும் செயற்படக்கூடிய விசேட செயற்பாட்டு மத்திய நிலையமொன்று நிறுவப்பட்டுள்ளது.

பரீட்சை முறைகேடுகள் தொடர்பில் 0113188350, 0113140314 என்ற இலக்கங்களுடன் அல்லது 0112784208, 0112784537 மற்றும் 1911 என்ற இலக்கங்களுடன் அல்லது 0112421111 மற்றும்119 என்ற பொலிஸ் தலைமையக இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.