உயர்தரப் பரீட்சை மதிப்பீட்டு பணிகள் 7 ஆம் திகதி ஆரம்பம்!

Report Print Gokulan Gokulan in கல்வி

உயர்தரப் பரீட்சை மதிப்பீட்டு பணிகள் இம்முறை மூன்று கட்டங்களின் கீழ் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முதற் கட்டமாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மதிப்பீட்டு பணிகள் இடம்பெறவுள்ளன.

இரண்டாம் கட்டப்பணிகள் செப்டம்பர் 13 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரையும் நடைபெறும் எனவும் மூன்றாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ளன.

மேலும், இந்த மதிப்பீட்டுப் பணிகள் 31 மத்திய நிலையங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.