தேசிய மட்ட தமிழ் தினப் போட்டியில் வவுனியா மாணவர்கள் இருவருக்கு தங்கப் பதக்கம்

Report Print Thileepan Thileepan in கல்வி

தேசிய மட்ட தமிழ் தினப் போட்டியில் வவுனியா, செட்டிகுளம் கோட்டத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு சேனநாயக்க வித்தியாலயத்தில் தேசிய மட்ட தமிழ் தினப் போட்டிகள் நடைபெற்றுள்ளன.

இதன்படி, வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வி.ம.ஆர்த்தனா பிரிவு - 5இல் கவிதை ஆக்கத்தில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தையும், வவுனியா, மாணிக்கவாசகர் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வன் அ.அனுசாந்த் பிரிவு - 4இல் கவிதை ஆக்கத்தில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தினையும் பெற்று தங்கப் பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

வவுனியா, செட்டிகுளம் கோட்டத்தில் தேசிய ரீதியில் தனி ஆக்கத்தில் குறித்த நிகழ்வில் தங்கப் பதக்கம் பெறப்பட்டமை இதுவே முதல்தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.