இலங்கையில் நாளை புலமைப்பரிசில் பரீட்சை

Report Print Aasim in கல்வி

ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாளை நாடளாவிய ரீதியில் 3,014 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சைக்காக மூன்று லட்சத்தி ஐம்பத்தி ஆறாயிரத்து எழுநூற்றி இருபத்தி எட்டு மாணவ, மாணவிகள் தோற்றவுள்ளனர்.

இதற்கிடையே இந்த ஆண்டு விசேட தேவையுடைய மாணவர்கள் ஐநூற்றி அறுபத்தி இரண்டு பேரும் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை ஆரம்பிக்கும் காலை ஒன்பது மணிமுதல் பரீட்சையின் இரண்டாம் வினாத்தாளுக்கான நேரம் முடிவடையும் வரை பரீட்சைக் கண்காணிப்பாளர்கள் தவிர பரீட்சை நடைபெறும் பாடசாலைகளின் அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்களோ, பரீட்சார்த்திகளின் பெற்றோர் உள்ளிட்ட வெளிநபர்கள் யாரும் பரீட்சை மண்டபம் அமைந்திருக்கும் பகுதிகளில் உட்பிரவேசிக்கவோ, நடமாடவோ அனுமதியளிக்கப்பட மாட்டாது என்றும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.