உயர்தர விஞ்ஞானப்பாட வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதா?

Report Print Aasim in கல்வி

இம்முறை நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் இரசாயன விஞ்ஞானப் பாடத்திற்கான கேள்வித் தாள் முன்கூட்டியே வெளியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

உயர்தரப் பரீட்சையின் இரசாயன விஞ்ஞானப் பாடத்திற்கான பரீட்சை நேற்று நடைபெற்றிருந்த நிலையில், குறித்த வினாத்தாளில் இடம்பெற்றிருந்த மூன்று கேள்விகள் கம்பஹா பிரதேசத்தில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் வழங்கப்பட்ட உத்தேச வினாத்தாளில் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகின்றது.

அத்துடன் குறித்த உத்தேச வினாத்தாளை வழங்கியிருந்த தனியார் வகுப்பு மாணவர் நேற்றைய தினம் கம்பஹாவில் தனது உத்தேச வினாக்கள் பரீட்சை வினாத்தாளில் இடம்பெற்றிருப்பதைக் குறிப்பிட்டு, தான் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் டியூசன் வகுப்புகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் கம்பஹா பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று கோரிக்கை விடப்பட்டுள்ளது