பரீட்சை எழுத வந்த இரு விசேட பரீட்சார்த்திகள்: பரீட்சைத் திணைக்களம் எடுத்த நடவடிக்கை

Report Print Aasim in கல்வி

நாடளாவிய ரீதியில் தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சைகள் இன்று நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.

அந்த வகையில், இம்முறை நடைபெறும் புலமைப்பரிசில் பரீட்சையில் இரண்டு விசேட தேவையுடைய பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றுவதாக தெரியவந்துள்ளது.

வத்தளை சென். அந்தோனி பாடசாலை மற்றும் பண்டாரவளை சென். ஜோசப் பாடசாலைகளில் இருந்து இவ்விரண்டு பேரும் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.

குறித்த இரண்டு விசேட பரீட்சார்த்திகளும் சுயமாக நடமாடவோ, எழுதவோ முடியாத விசேட தேவையுடைய மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் எழுத முடியாத நிலையை கருத்திற் கொண்டு கேள்விகளுக்கான பதில்களை அவர்களின் குரலில் ஒலிப்பதிவு செய்து கொள்ளவும் அதனை இன்னொருவரைக் கொண்டு விடைத்தாள்களில் எழுதிக் கொள்ளவும் பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்று நடைபெறும் புலமைப்பரிசில் பரீட்சையில் மூன்று இலட்சத்து ஐம்பத்தி ஆறாயிரத்து எழுநூற்றி இருபத்தியெட்டு (356,728) பேர் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.