இலங்கையிலிருந்து மாணவர்களை மீள அழைக்கிறது பூட்டான்

Report Print Ajith Ajith in கல்வி

இலங்கையில் மருத்துவ கற்கையில் ஈடுபட்டுள்ள தமது நாட்டு மாணவர்கள் அனைவரையும் நாடு திரும்புமாறு பூட்டான் அரசாங்கம் அறிவித்துள்ளது.

பூட்டான் உயர் கல்வித் திணைக்களம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு இலங்கையில் தொடர்ந்து எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றது.

இதன் காரணமாக மருத்துவக் கற்கைகள் தொடர்ந்து பாதிக்கப்படுவதனால், பூட்டான் அரசாங்கம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

இதேவேளை, இலங்கையின் அரசியல் நிலைமைகள் குறித்தும் பூட்டான் அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.