பிரித்தானிய பெண்ணொருவர் இலங்கையில் செய்யும் மகத்தான பணி!!

Report Print Vethu Vethu in கல்வி

பிரித்தானிய பெண்ணொருவர் இலங்கையில் செய்யும் மகத்தான பணி தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த Paula Brock என்ற ஆசிரியை, இலங்கையிலுள்ள சிறுவர்களுக்கு ஆங்கில கல்வியை போதித்து வருகிறார்.

மொழி ரீதியாக தொடர்பில்லாத இரு தரப்பினரும் மொழி தொடர்பில் கற்பிப்பது ஆரோக்கியமான விடயமாக பார்க்கப்படுகிறது.

பிரித்தானியாவின் கிரீன்விச் கல்வியாளர் ஒருவர் இலங்கையின் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு ஆங்கில பாடத்தை கற்றுக் கொடுத்து வருகிறார்.

ஆங்கில அறிவு இல்லாத 25 சிறுவர்களை தெரிவு செய்து, ஆங்கில மொழியை Paula Brock போதித்து வருகிறார்.

இலங்கையின் கன்னொறுவ என்ற கிராமத்தில் வண்ணமயமான ஒரு பள்ளி அறை ஒன்றை அவர் கண்டுபிடித்துள்ளார்.

Brock கற்பிப்பதற்கு ஆரம்பிக்கும் போது மாணவர்கள் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தையும் அறிந்திக்கவில்லை. அத்துடன் மாணவர்களின் மொழியான சிங்கள மொழியில் ஒரு வார்த்தையும் Brock அறிந்திருக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

ஆனால் ஓவியங்கள், நடனம் மற்றும் படங்கள், வண்ணங்கள் மூலம் மாணவர்கள் ஆங்கில வார்த்தைகளை கற்றுக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

ஆங்கிலத்தை ஒருபோதும் இரண்டாவது மொழியாக எண்ணாத மாணவர்களுக்கு, உண்மையில் ஆங்கிலம் கவனத்தை ஈர்த்ததென Brock மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ஜுலை மற்றும் ஒகஸ்ட் மாதங்களில் இரண்டு வாரங்கள் தன்னார்வத் தொண்டு செய்யும் நோக்கில் இலங்கை வந்த ஆசிரியை Brock மாணவர்களுக்கு கற்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.