150 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Report Print Ashik in கல்வி

மன்னார் புனர்வாழ்வு அமையத்தின் ஏற்பாட்டில், மடு வலயக் கல்விப் பணிமனை பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு நேற்று கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மன்னார் புனர்வாழ்வு அமையத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில், தட்சணா மருதமடு ம.வி பாடசாலையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வின் போது 150 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், அருட்தந்தை, மாணவர்கள் மற்றும் மன்னார் புனர்வாழ்வு அமையத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.