கொழும்பு - மருதானை ஹய்ரியா முஸ்லிம் பெண்கள் கல்லூரியில், மாணவிகளுக்கு தலைமைத்துவம் வகிப்பவர்களை நியமிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்று ஹய்ரியா முஸ்லிம் பெண்கள் கல்லூரியில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள்,பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.