உள்ளூராட்சி தேர்தலை ஜனவரி 20ஆம் திகதிக்கு பின்னரே நடத்தலாம்: மஹிந்த தேசப்பிரிய

Report Print Ajith Ajith in தேர்தல்

உள்ளூராட்சி சபைத்தேர்தல் பெரும்பாலும் 2018 ஜனவரி 20ஆம் திகதிக்கு பின்னர் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கல்விப்பொதுத் தராதர சாதாரண பரீட்சை நடைபெறுவதன் காரணமாக 2017 ஆம் ஆண்டு டிசம்பரில் தேர்தலை நடத்த முடியாது.

ஏற்கனவே இது தொடர்பில் தேர்தல்கள் கண்காணிப்புக் குழுக்களுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் செய்யப்பட்டுள்ளன.

அதேநேரம் டிசம்பர் 30 மற்றும் 31இல் தேர்தலை நடத்த முடியாது. அரச நிறுவனங்களில் கணக்காய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றமையே இதற்கான காரணமாகும்.

தை மாதம் தைப்பொங்கல் காரணமாக தேர்தலை நடத்த முடியாது. எனவே 2018 ஜனவரி 20ஆம் திகதிக்கு பின்னரே தேர்தலை நடத்தமுடியும் என்று தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.