200 உள்ளூராட்சி மன்றங்களில் வெற்றியீட்ட முடியும்: பசில்

Report Print Kamel Kamel in தேர்தல்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுமார் 200 உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்ற முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பல அரசியல் கட்சிகள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமது கட்சி மிகச் சிறந்த முறையில் வெற்றியீட்டும் என அவர் தெரிவித்துள்ளார்.