பாரிஸ் ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் வழங்குமா?

Report Print Amirah in ஐரோப்பா

பரிஸ் காலநிலை ஒப்பந்தம் நவம்பர் மாதம் அமுலாகுமென என எதிர் பார்க்கப்படுகின்றது.

இந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதை விரைவுபடுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைச்சர்கள் ஒப்புதல் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்திலிருந்து அடுத்த வாரம் அதற்கான ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கை, இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஏற்கனவே இதற்கு ஆதரவு வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த ஒப்புதலானது ஏழை பணக்கார நாடு என்ற பாகுபாடின்றி, காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக தமது பொருளாதாரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments