ஆங்கில கால்வாயில் ரஷ்யா போர்கப்பல்கள் - இங்கிலாந்து போர் கப்பல்களை குவித்தது

Report Print Thayalan Thayalan in ஐரோப்பா

ரஷ்யாவின் 6 போர் கப்பல்கள் சிரியாவிற்கு அனுப்பபடுவதாக கூறி ஸ்காட்லாந்து இங்கிலாந்தை நோக்கிய ஆங்கில கால்வாய் அருகே ஒரு கரை ஓரமாக பயணித்துள்ளது. இதன்போது ரஷ்யாவின் நாசக்கார நீர் மூழ்கிக் கப்பல் ஒன்றும், 2 பெரிய போர் கப்பல்களும் மேலும் ஒரு விமானம் தாங்கிக் கப்பல் மற்றும் இரண்டு சிறிய ரக அதிவேக தாக்குதல் கப்பல்கள் அணிவகுத்து சென்று உள்ளன. இதனை ரேடார் மூலம் கவனித்த இங்கிலாந்து அதிர்ச்சிக்குள்ளாகியது.

இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் உடனடியாக அதி நவீன நாசகார போர் கப்பலையும் எச்.எம்.எஸ் -டங்கன்) மேலும் 6 கப்பல்களை அந்த இடம் நோக்கி அனுப்பியது.

இதுவரை எச்.எம்.எஸ் டங்கன் எனும் அதி நவீன நாசகார கப்பலை இங்கிலாந்து உலகிற்கு காட்டியதே இல்லை.

இதை தொடர்ந்து இங்கிலாந்துக்கு உதவும் பொருட்டு நார்வே நாட்டின் 2 போர் கப்பல்கள் ரஷ்ய கப்பல்கள் சென்ற இடம் நோக்கி நகர, மேலும் 2 போர் கப்பல்களை இங்கிலாந்து பிரான்ஸ் பக்கமாக இருந்து நகர்த்தியது.

மொத்தமாக 8 இங்கிலாந்து போர் கப்பல்கள் ரஷ்யாவின் 6 போர் கப்பலை நோக்கிச் செல்லும் நிலையில் ரஷ்ய விமானம் தாங்கிக் கப்பலில் இருந்த அதி நவீன தாக்குதல் ஹெலிகாப்டர்கள் உடனே கிளம்பி வானில் பறக்கதுவங்கியது.

மேலும் நிலமைகளை அறிந்த ரஷ்ய அதிபர் “விளாடிமிர் புடின்” உடனடியாக ஆப்பிரிக்காவின் கருங்கடல் பக்கமாக நின்ற தனது மிகப்பெரிய தாக்குதல் கப்பலை இங்கிலாந்து நோக்கி நகர்த்தினார்.

இதனைக் கவனித்த இங்கிலாந்து பாதுகாப்பு துறை எச்.எம்.எஸ்S “ரகன்” என்னும் அதி நவீன போர் கப்பலை அவ்விடம் நோக்கி அனுப்பிது.முன்னேறிய 2 ரஷ்ய கப்பலை தடுத்து நிறுத்த பெரும் பதட்டம் ஏற்பட்டது.

இதன்பின் விமானப்படையின் விமானங்கள் உடனடியாக இங்கிலாந்தின் கரையோரங்களை நோட்டமிட ஆரம்பித்தவுடன் மட்டுமல்லாது, இரு நாட்டு தூதர்களும் உடனடியாக ஒருவரை ஒருவர் தொடர்புகொண்டு பேசினார்கள்.

குறித்த தொடர்பில் ரஷ்யா தாம் தாக்குதலுக்கு வரவில்லை என்றும், சிரியா நோக்கி தான் தனது படைகளை நகர்த்துவதாகவும் விளக்கியது.

பதிலுக்கு பாதுகாப்பு அமைச்சுகளை தொடர்புகொண்ட இங்கிலாந்து உங்கள் கடல்படை தங்களை ஒன்றும் செய்துவிட முடியாது என்றும், ரஷ்யாவின் போர் கப்பலை சர்வதேச எல்லைக்குள் கொண்டுசெல்லுமாறு பணித்துள்ளது.

இந்நிலையில் தனது மேலும் 2 போர் கப்பலை நிறுத்தி இங்கிலாந்தை மேலும் அதிர்ச்சியூட்ட முயற்சிகளை ரஷ்யா மேற்கொண்டு உள்ளது.

இதை தொடர்ந்து இங்கிலாந்து வான் தாக்குதல் படையினர் தயார் நிலைக்கு வர ரஷ்ய கப்பல்கள் பின்வாங்கி சென்றுள்ளது.

சற்று முன்னர் நடந்த இந்த நிகழ்வுகளினால் இங்கிலாந்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகிய நிலையில் ஐ.நா சபை உள்பட பல பல நாடுகள் ரஷ்யா- இங்கிலாந்துடனான முரண்பாடகளை உடனே நிறுத்தவேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றன.

- Daily Thanthi

Comments