பண பரிவர்தனையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் ஸ்வீடன்...! டிஜிட்டல் கரன்சி அறிமுகம்

Report Print Murali Murali in ஐரோப்பா

இன்றைய உலகின் அனைத்து நாடுகளிலும் முக்கிய மாற்றுக் கருவியாக பணம் தான் செயற்பட்டு வருகின்றது.

அனைத்து பரிமாற்றங்களுக்கும் மூல ஆதாரமே பணம் தான்.

எனினும் இந்த வழக்கத்தைத் தகர்த்துள்ளது பணபுழக்கமே இல்லாத நாடாக பரிணமிக்க ஸ்வீடன் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய வங்கியின் துணை ஆளுநர் செசிலியா ஸ்கிங்ஸ்லேயோவா தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், நவீன தொழில்நுட்பத்துடனான முறையிலேயே அனைத்து பணப் பரிவர்தனைகளையும் செய்யும் வகையில், டிஜிட்டல் கரன்சியை வெளியிட்டு ஸ்வீடன் சாதனை படைக்கவுள்ளது.

தற்போதைய நிலையில், ஸ்வீடனில் 80 வீதமான பணப் பரிவர்தனை இணையம் மற்றும் கையடக்க தொலைபேசி செயலிகள் மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றன.

இதன் காரணமாக 2009ஆம் ஆண்டு முதல் அந்த நாட்டில் பண நோட்டு மற்றும் நாணயங்களின் உற்பத்தி 40 சதவீதம் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை விரிவு படுத்தும் நோக்கில் 2019ஆம் ஆண்டு முதல் டிஜிட்டல் கரன்சியை வெளியிட்டு, முற்றிலும் பணப்புழக்கமே இல்லாத நாடாக ஸ்வீடனை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், 1660ஆம் ஆண்டு உலகில் முதல் முறையாக காகிதத்தால் ஆன பண நோட்டுகளை அறிமுகப்படுத்திய நாடு ஸ்வீடன் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments