பிரித்தானியாவில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய 16 வயது சிறுமியின் மரணம்

Report Print Vino in ஐரோப்பா

பிரித்தானியாவில் தென் யார்க்ஷயர் பகுதியில் நேற்று 16 வயது சிறுமி ஒருவர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அங்குள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த சிறுமி மர்ம நபர்களால் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இந்த சிறுமி கொலை தொடர்பில் சந்தேகத்தில் 18 வயதான நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்து வெளியிட்டுள்ளன.

இந்த சிறுமி இறப்பு தொடர்பில் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை நடத்தி வரும் நிலையில், அந்த சிறுமியுடைய நண்பர் ஒருவர் "அவர் சமூக வலைதளத்தில் பழக்கமான ஒருவரை சந்திக்க சென்றதாகவும் மீண்டும் அவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த லியோனி என்ற சிறுமி இறப்பு தொடர்பில் முழுமையாக தகவல்கள் கிடைக்கப்பெறாத நிலையில் பொலிஸார் அவரது பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் மக்களின் உதவியினை நாடியுள்ளனர்.

அந்தவகையில் 101 என்ற இலக்கத்திற்கு அழைத்து மக்கள் தங்களுக்கு தகவல்களை வழங்க முடியும் என தெரிவித்துள்ளது.

Comments