2 ஆம் உலகப்போர் வெடிகுண்டு: மூடப்பட்ட பாதைகள்..! அச்சத்தில் மக்கள்

Report Print Vino in ஐரோப்பா

பிரித்தானியாவின் மிகவும் பரபரப்பாக மற்றும் போக்குவரத்து மிகுந்த பகுதியாக காணப்படும் வாட்டேர்லோ மற்றும் வெஸ்ட் மினிஸ்டர் பாலங்கள் திடீரென்று பொலிசாரால் மூடப்பட்டதன காரணமாக பெரும்பாலான மக்கள் பல அசௌகாரியத்திற்கு உற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் அந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்று வழியூடாக அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு 2ஆம் உலகப் போரின் போது போடப்பட்ட வெடிகுண்டு வெடிக்காத நிலையில் இருப்பதால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனை எடுக்கும் பணிகள் துரிதமாக செயற்பட்டு வருவதன் காரணமாக சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் 3 மணி நேரங்களுக்கு பின்னர் பாதை முழுவதும் திறந்து விடப்படும் என்றும், இந்த செயற்பாடுகள் அனைத்தும் மக்களின் நன்மைக்காக மேற்கொள்ளப்படுகின்றது என அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மேலும் மீட்புப்பணிகளுக்காக சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்ததுடன் அந்த நட்டு மக்களும் தங்கள் டுவிட்டர் தளத்தில் வெடிக்காத நிலையில் உள்ள வெடிகுண்டு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் தங்களது எதிர்ப்பினை வெளியிட்ட மக்கள் பின்னர் அந்த நட்டு மக்களுக்காக இவ்வாறான செயற்பாட்டில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதால் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Comments