16 ஆயிரம் பேரை உள்வாங்க வேண்டும் : ஒரே இடத்தில் ஒன்றரை லட்சம் பேர் போராட்டம்..!

Report Print Vino in ஐரோப்பா

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் ஒன்றிணைந்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு பல இடங்களிலும் போர் காரணமாக அதிகளவிலான மக்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு திருப்பி அனுப்புதல் மற்றும் நடுக்கடலிலேயே உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தும் 16 ஆயிரம் அகதிகளை உள்வாங்குவதாக கூறி வாக்குறுதியளித்தது.

இந்த நிலையில் ஸ்பெயின் நாடு மட்டும் கடந்த ஆண்டில் ஆயிரத்து 100 பேரை மட்டுமே உள்வாங்கி இருந்தது.

அரசாங்கத்தின் குறித்த செயற்பாட்டினை கண்டித்து நேற்று பார்சிலோனாவில் பாரியளவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் "16 ஆயிரம் அகதிகளையும் வரவேற்கின்றோம் " அவர்களை உடனடியாக உள்வாங்க வேண்டும், இல்லையேல் இதனை விட பெரிய ஆர்ப்பாட்டம் இடம்பெறும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், அவர்களை வரவேற்கும் முகமாக "அரசாங்கமே அனைத்துக் கதவுகளையும் திறக்கவேண்டும்" என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

advertisement

Comments