இமானுவல் மக்ரானின் வெற்றியை தொடர்ந்து யூரோ பெறுமதியில் திடீர் மாற்றம்

Report Print Murali Murali in ஐரோப்பா

பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி தேர்தலில் இமானுவல் மக்ரான் வெற்றி பெற்றதை தொடர்ந்து யூரோவின் பெறுமதி திடீர் அதிகரிப்பை காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான யூரோவின் பெறுமதி 1.1024ஆக காணப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கடந்த ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த அதிகரிப்பு மிகவும் அதிகம் என சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரான்ஸ் நாட்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் 39 வயதான இமானுவல் மக்ரான் வெற்றி பெற்று, மிக இளவயதில் அந்நாட்டில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You may like this video

Comments