ஐரோப்பிய உயர் நீதிமன்றத்தில் கேட்கப்பட்ட இரு கேள்விகள்! நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு

Report Print Shalini in ஐரோப்பா

ஐரோப்பிய குடியுரிமை அல்லாத கணவன் அல்லது மனைவிக்கும் ஐரோப்பிய குடியுரிமை உள்ளவருக்கும் இடையே திருமண முறிவு அடையும் பொழுது அவர்களுடைய ஐரோப்பிய குடியுரிமை பெற்ற குழந்தை நிரந்தர வதிவுரிமை பெறாத தாய் அல்லது தந்தையுடன் குறிப்பிட்ட ஐரோப்பிய நாட்டை விட்டு செல்ல வேண்டுமா என்ற கேள்விக்கு பதில் கூறும் வகையில் ஒரு வழக்கு அமைந்துள்ளது.

H.C. Chavez-Vilchez and Others v Raad van bestuur van de Socialeverzekeringsbank and Others என்ற வழக்கில் Venezuelan National பெண் சுற்றுலா வந்த பொழுது ஒரு நெதர்லாண்ட்ஸ் குடியுரிமை பெற்ற ஆணை திருமணம் செய்து பின்னர் ஜெர்மனி சென்று அவர்கள் குழந்தையோடு வாழ்ந்து வந்தார்கள்.

பின்னர் குழந்தையுடைய தந்தை, குழந்தையையும் தாயையும் பிரிந்து எந்த பண உதவியும் செய்யாமல் விலகி சென்று விட்டார்.

குழந்தையின் தாயார் குழந்தையோடு நெதர்லாண்ட்ஸில் வசிக்கும் பொழுது பண உதவி கேட்டு அரசாங்கத்தில் மனு தாக்கல் செய்தார்.

நெதர்லாண்ட்ஸ் அரசாங்கம் அவருடைய மனுவை நிராகரித்து விட்டது. இந்த வழக்கு நெதர்லாண்ட்ஸ் உயர் நீதிமன்றத்துக்கு வரவே உயர்நீதிமன்றம் அந்த வழக்கை ஐரோப்பிய உயர்நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்தது.

ஐரோப்பிய உயர்நீதிமன்றத்தின் முன்னே இரண்டு கேள்விகள் முக்கியமாக கேட்கப்பட்டு இருந்தது. அதாவது அவருக்கு அந்த நாட்டில் இருப்பதற்கு உரிமையுண்டா? மற்றும் அரச பண உதவிக்கு சட்ட தகமையுள்ளதா?

இதற்கு ஐரோப்பிய நீதிமன்றம் கூறியதாவது,

ஐரோப்பிய குடியுரிமை பெற்ற குழந்தையின் பெற்றோர் ஐரோப்பிய வதியுரிமை சட்டத்தில் வசிப்பதற்கு இடமுள்ளது.

ஆகையால் அவர்கள் அரச உதவி பெற்றுக் கொள்ளுவதற்கு இடமுள்ளது என்று கூறி வழக்கை மீண்டும் மேல் விசாரணைக்காக Higher Administrative Court of Netherlands திருப்பி அனுப்பியிருக்கின்றது.

ஆயினும் ஒவ்வொரு வழக்கும் தனித்தன்மையுடையது. ஆகவே அதனுடைய உண்மைத் தன்மையை அறிந்தே ஒவ்வொரு வழக்கிலும் முடிவுகள் எடுக்கப்படும்.

இந்த வழக்கினை நீங்கள் இங்கே அழுத்துவதன் மூலமாக வாசித்துக் கொள்ளலாம்.

https://curia.europa.eu/jcms/upload/docs/application/pdf/2017-05/cp170048en.pdf

இவ்வழக்கில் நீதிமன்றம் மேலும் கூறியதாவது, அரசாங்கமானது ஒரு மனுவை பரிசீலிக்கும் பொழுது குழந்தையுடைய குடும்பத்துடன் வாழும் உரிமை மற்றும் குழந்தையுடைய சிறப்பு நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது.

இந்த வழக்கானது நெதர்லாண்ட்ஸ் நாட்டை மையமாக வைத்து நடைபெற்று இருந்தாலும் மற்றைய ஐரோப்பிய உறுப்பு நாட்டுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் - Jay Visva Solicitors,

மேலதிக தொடர்பு எண் - (44)020 8573 6673

Comments