பின்லாந்தில் பயங்கரவாத தாக்குதல் - ஒருவர் பலி - பலர் காயம்

Report Print Vethu Vethu in ஐரோப்பா

பின்லாந்தில் மர்ம நபர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பலரை கொலை செய்யும் நோக்கில் கத்தியால் மர்ம நபர் ஒருவர் குத்தியுள்ளார். இதுவொரு பயங்கரவாத தாக்குதல் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் மேற்கொண்ட நபரை கைது செய்ய முயன்ற பொலிஸார், மர்ம நபரின் காலில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

பின்லாந்தின் தென்மேற்கில் உள்ள Turku என்ற பகுதியில் இன்று இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தின் போது துப்பாக்கி சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதல் சம்பவம் ஒரு சந்தை வளாகத்தில் இடம்பெற்றதாகவும், பலர் இந்த கத்திக் குத்து தாக்குலுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பகுதியில் உள்ள மக்களை அவ்விடத்தில் இருந்து வெளியேறுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

காலில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.