நெதர்லாந்தில் தவிர்க்கப்பட்ட பாரிய பயங்கரவாத தாக்குதல்

Report Print Vethu Vethu in ஐரோப்பா

நெதர்லாந்தில் மேற்கொள்ள திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல் கடைசி நேரத்தில் முறியடிக்கப்பட்டுள்ளது.

ரோடர்டேம் நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சிக்கு அருகில் தாக்குதல் மேற்கொள்ள தயாராக ஏரிவாயு நிரப்பப்பட்ட வான் ஒன்றினை அந்த நாட்டு பொலிஸார் மீட்டுள்ளனர்.

ஸ்பெயின் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல்களுக்கமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்பெய்னில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வானின் சாரதி தற்போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க ரொக் இசை குழுவானா அலோஹ் -லாஸ் இசை குழு கலந்து கொள்ளவிருந்த இசை நிகழ்ச்சி மீது தாக்குதல் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த இசை குழுவின் பெயர் முஸ்லிம் மதத்திற்கு ஒத்ததாக காணப்படுகின்றமையினால், இந்த முறையில் ஜிஹாட் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களை தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

எப்படியிருப்பினும் இந்த அனைத்து விடயங்களை கருத்திற் கொண்டு இறுதி நேரத்தில் இந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்வதற்கு அதன் ஏற்பாட்டாளர்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட வானில் இருந்து குண்டு துளைக்காத ஆடை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இடம்பெற்ற ஸ்பெய்ன் தாக்குதலுக்கும் இந்தச் சம்பவத்திற்கும் இடையில் தொடர்பில்லை என நம்பப்படுகின்றது.