வரலாற்று புகழ்பெற்ற பெரியபுல்லுமலை புனித செபமாலை மாதா ஆலயத்தின் பாதயாத்திரை

Report Print Kannan Kannan in நிகழ்வுகள்
advertisement

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரம்பரிய கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றான பெரியபுல்லுமலை புனித செபமாலை மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் பாத யாத்திரை நேற்று (05) மாலை நடைபெற்றுள்ளது.

இலங்கையில் வரலாற்று புகழ்பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களுள் ஒன்றான பெரியபுல்லுமலை புனித செபமாலை மாதா ஆலயத்தின் திருவிழாவானது வருடாந்தம் வெகு சிறப்பான முறையில் இடம்பெற்று வருகின்றது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

மட்டக்களப்பு மரியாள் பேராலயத்திலிருந்து திருப்பலி ஒப்புக்கொடுத்தலுடன் ஆரம்பமான பாத யாத்திரை செங்கலடி புனித நிக்கலஸ் தேவாலயம் ஊடக பெரியபுல்லுமலை புனித செபமாலை மாதா ஆலயத்தை சென்றடைந்தது.

அத்துடன், நேற்றைய தினம் ஆரம்பித்த பாத யாத்திரை இரவு இரவாக பக்தர்களின் பக்தி கீர்த்தனையுடன் பெரியபுல்லுமலை புனித செபமாலை மாதா ஆலயத்தினை இன்று (6) வந்தடைந்துள்ளது.

மேலும், பாதயாத்திரையில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மதபேதமின்றி ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர். குறித்த பாதயாத்திரைக்கு அதிகளவான சிங்கள மக்கள் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

advertisement

Comments