மட்டக்களப்பு வாகரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

Report Print Rusath in நிகழ்வுகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாகரைப் பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் இவ்வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வாகரை பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெறவுள்ளது.

நாளை காலை(18) 09.30 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான துண்டுப் பிரசுரங்களும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கட்சி உறுப்பினர்களினால் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அத் துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 08 உரிமை கேட்ட ஈழத் தமிழ் இனத்தின் மீதான உக்கிரத் தாக்குதலின் இறுதி நாள்.

ஒரு லட்சத்து நாற்பதாயிரம் எமது உறவுகளை சர்வதேசத்தின் கண் முன்னாலேயே வன்கொலை செய்து முடித்திட்ட கொடிய நாள்.

ஈழத் தமிழினம் உலகின் கையாலாகாத் தனத்தினால் துயரக் கடலிலே தூக்கி வீசப்பட்ட துன்ப நாள்.

இச் சோக தினத்தை நினைவு கூர்ந்திட, அமரர்கள் ஆக்கப்பட்ட எமது உறவுகளின் ஆன்ம ஈடேற்றத்துக்காய் வழிபாடாற்றிட ஓன்று கூடுவோம், உளமாரத் துதிப்போம்.

இடம் :- வாகரை பிள்ளையார் ஆலயம்

காலம் :- 18.05.2017 வியாழக்கிழமை, மு.ப. 09.30 மணி தொடக்கம்

ஏற்பாடு :- இலங்கைத் தமிழரசுக் கட்சி, வாகரைப் பிரதேசக் களை.

முக்கிய பங்கேற்போர் : மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு, பாராளுமன்ற, முன்னாள் பாராளுமன்ற, மாகாணசபை மக்கள் பிரதிநதிகள் மற்றும், இளைஞர், மகளீர் அணியினர்.

நிகழ்வுகள் : கூட்டு வழிபாடு, அபிடேகப் பூசை, நினைவுச் சுடர் ஏற்றல் என்பவற்றோடு அன்னதான நிகழ்வும் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments