உருத்திரபுரம் மகாவித்தியாலயத்தின் 67வது ஆண்டு நிறைவும் வருடாந்த பரிசளிப்பு விழாவும்

Report Print Yathu in நிகழ்வுகள்
advertisement

கிளிநொச்சி உருத்திரபுரம் மகாவித்தியாலயத்தின் 67வது ஆண்டு நிறைவும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நுழைவாயில் திறப்பு விழா நிகழ்வும் இன்று நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சி கல்வி வலயத்தின் 67 வருடகால கல்விச்சாதனை புரிந்து வரும் கிளிநொச்சி உருத்திரபுரம் மகாவித்தியாலயத்தின் 67ஆவது ஆண்டு நிறைவும் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் பாடசாலையின் நுழைவாயில் திறப்பு விழாவும் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு பாடசாலையின் முதல்வர் மீனலோஜினி இதயசிவதாஸ் தலைமையில் நடைபெற்றது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

வடக்கு மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் கீழ் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட பாடசாலை நுழைவாயில் வளைவினை வடக்கு மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை திறந்து வைத்தார்.

பாடசாலை நுழைவாயிலின் மதிலை அமைத்து வழங்கிய பாடசாலை நலன்விரும்பி கனகசபை இராசம்மா நினைவுக்கல்லினை திரை நீக்கம் செய்து வைத்தார்.

தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு மாணவர்களின் கலைநிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.

இந்நிகழ்வில் அயல் பாடசாலை அதிபர்கள், ஆசியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர்.

advertisement

Comments