செங்கலடி ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் தீர்த்தோற்சவம்

Report Print Kannan Kannan in நிகழ்வுகள்
advertisement

மட்டக்களப்பு, செங்கலடி ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளாகிய இன்று தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

வைகாசி 14ஆம் திகதி தேவஸ்தானத்தின் கொடியேற்றம் ஆரம்பமாகி நேற்றைய தினம் பக்தர்கள் வடம் இழுக்க விநாயகர் சித்திரைத் தேரில் வலம்வந்தார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இந்த நிலையில், இன்று காலை களுவன்கேணி இந்துமா சமுத்திரத்தில் நடைபெற்ற தீர்த்தோற்வசத்திற்கு ஆலயத்தில் இருந்து எழுந்தருளிய விநாயகப் பெருமான் ஊர்வலமாக வருகை தந்ததும் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.

இந்த தீர்த்தோற்சவ நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், வருகை தந்த பக்தர்களின் நலன்கருதி தாகசாந்தி நிலையங்களும் அமைக்கப்பட்டு, பானங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

advertisement

Comments