படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் நடேசனின் 13ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Report Print Thamilin Tholan in நிகழ்வுகள்
advertisement

யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் மாமனிதர் ஐயாத்துரை நடேசனின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன்கிழமை பிற்பகல்-04.30 மணி முதல் யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அண்மையிலுள்ள மறைந்த ஊடகவியலாளர் ஞாபகார்த்த நினைவுத் தூபிக்கு முன்பாக இடம்பெற்றது.

யாழ்.ஊடக அமையத்தின் தலைவர் எஸ். சபேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

அதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூத்த ஊடகப் பயிற்றுனர் ம.கனகேஸ்வரன், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாமனிதர் ஐயாத்துரை நடேசன் ஞாபகார்த்தமாக முதலாவது ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடமாகாண சபை வேட்பாளர் மு. தம்பிராசா, மூத்த ஊடகவியலாளர் ஆர் .தயாபரன் உள்ளிட்டோர் ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதுடன், ஊடகவியலாளர்களால் மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

நினைவுரையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் நிகழ்த்தினார்.

குறித்த நிகழ்வில் தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் இருவரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

advertisement