ஜனாதிபதி தலைமையில் பொலன்னறுவையில் வெசாக் கொண்டாட்டங்கள்

Report Print Aasim in நிகழ்வுகள்

பொசொன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பொலன்னறுவையில் பல்வேறு வைபவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பொசொன் பௌர்ணமி தினமான இன்று தொடக்கம் எதிர்வரும் 10ம் திகதி வரை இந்த வைபவங்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளன.

பொசொன் வருடாந்த அன்னதானம் பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் அருகில் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இந்த அன்னதானம் நாளை வரை நடைபெறும்.

அத்துடன் மெதிரிகிரிய வடதாகெய விகாரையில் பொசொன் போயா தொடர்பான விசேட பௌத்த நல்லுபதேசம் நிகழ்த்தப்படவுள்ளது.

எதிர்வரும் 09ம் திகதி இங்கிருந்தே வரலாற்றுப் புகழ் மிக்க பொலன்னறுவை பொசொன் பெரஹரா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.

இதற்கு மேலதிகமாக முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரின் பங்களிப்புடன் பொலன்னறுவை முழுவதும் 75 இடங்களில் வெசாக் தோரணைகள் மற்றும் வெளிச்சக் கூடு கண்காட்சிகள் என்பன நடைபெறவுள்ளன.