இளைஞர் சேவைகள் மன்ற நிருவாக காரியாலயம் திறந்து வைப்பு

Report Print Kumar in நிகழ்வுகள்

40ஆண்டுகளாக மட்டக்களப்பு அரசடி பலநோக்கு கட்டிடத்தில் சொந்தக் கட்டிடம் இல்லாது தற்காலிகமாக இயங்கி வந்த மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இளைஞர் சேவைகள் மன்ற நிருவாக காரியாலயம் தற்போது கல்லடியில் யுனிசப் நிறுவனத்தின் சுமார் 60இலட்சம் செலவில் அமைக்கப்பட்டு இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதிப்பணிப்பாளர் ஏ.ஹமீர் தலைமையில் இடம் பெற்ற வைபவத்தில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா பிரதம அதிதியாக பங்கேற்று திறந்து வைத்தார்.

இவ்வைபவத்தில் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன் எஸ்.வியாழேந்திரன், ஞா..சிறிநேசன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோ.கருணாகரம் ஞா.கிருஸ்னபிள்ளை இலங்கைக்கான யுனிசப் வதிவிட பிரதிநிதி பௌலா புலசியா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.